தூத்துக்குடியில் 6 வது புத்தகத் திருவிழா – 2025 அழைக்கிறார் ஆட்சியர் இளம்பகவத் இ. ஆ. ப.

தூத்துக்குடியில் 6 வது புத்தகத் திருவிழா – 2025
அழைக்கிறார் ஆட்சியர் இளம்பகவத் இ. ஆ. ப.

தூத்துக்குடியில் ஆறாவது புத்தகத் திருவிழாவின் ஆரம்ப விழா ஆகஸ்ட் – 22 – 2025 வெள்ளிக்கிழமை இன்று மாலை 5 மணி அளவில் தருவை மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இ.ஆ.ப. தலைமை உரை ஆற்ற இருக்கிறார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.

விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இ. ஆ. ப.அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த 6 வது புத்தகத் திருவிழா 22 – 08 – 2025 வெள்ளிக்கிழமை இன்று முதல் 31 – 8 – 2025 ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுக்கு பயனுள்ள புத்தகங்களை வாங்கி தங்களின் அறிவுகளுக்கு வேலையீட்டும் விதமாக நடந்து கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மற்றும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்துச் சென்று அவர்களின் புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.