TNEA – 2025: பொறியியல் 3-ம் கட்ட கலந்தாய்வில் 43,338 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

TNEA – 2025: பொறியியல் 3-ம் கட்ட கலந்தாய்வில் 43,338 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், 43 ஆயிரத்து 338 மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் தற்காலிக இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 993 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் 8 ஆயிரத்து 91 மாணவர்களுக்குத் தற்காலிகமாக கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களில், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் 371 மாணவர்களும் உள்ளனர்.

தற்காலிக இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் நேரடியாகச் சென்று சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதே சமயம், தற்காலிகமாக ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்த இடங்கள் காத்திருக்கும் மற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் சேர்வதற்கு மற்றும் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 17 கடைசி நாளாகும்.