தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வருங்கால “ஹீரோக்களாக ஆகுவோம்” தன்னம்பிக்கை உரை

தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வருங்கால “ஹீரோக்களாக ஆகுவோம்” தன்னம்பிக்கை உரை

தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள நடராஜன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியா்களுக்கு வருங்கால ஹீரோக்களாக ஆகுவோம் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரை நிகழ்தப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள நடராஜன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் சாந்தி தலைமையில் பால மணிவண்ணன் ஓய்வு பெற்ற பேராசிரியா் மாணவ மாணவியா்களுக்கு வருங்கால ஹீரோக்களாக ஆகுவோம் என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரையாற்றினாா்கள்.

தொடா்ந்து ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களாக நாம் எங்கே பயனிக்கிறோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்கள்.

மாணவ மாணவிகள் மத்தியில் செல்போன் பாா்ப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பொம்மலாட்டம் மூலமாக குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி நிறுவனா் சைமன் தலைமையில் தூத்துக்குடி அரசு மாதிரி பள்ளி ஆசிரியா்கள் கலைவளா்மணி சக்திவேல் மற்றும் எழுத்தாளரும் ஆசிரியருமான மாரிமுத்து இணைந்து செய்து மாணவா்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பொம்மலாட்ட நிகழ்வானது மாணவ மாணவியர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் நியுட்டன் கலந்து கொண்டார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நடராஜன் மேல்நிலைப்பள்ளியில் முன்னால் படித்த பழைய மாணவா்களின் ஆலோசனையின் படி பழைய மாணவா் செல்வின் செய்திருந்தார்.