தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 95 வது ஆண்டு விழா

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 95 வது ஆண்டு விழா

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 95 ஆவது ஆண்டு கொண்டாடப் பெற்றது.

வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். 26 மற்றும் 41 மாமன்ற உறுப்பினர்கள்,சகா கலைக்குழுவின் நிறுவனர் டாக்டர்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக வட்டார வளமைய மேற்பார்வையாளர், வட்டார வளமைய பயிற்றுனர், சிறப்பு ஆசிரியர், கணக்கர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், கராத்தே ஆசிரியர், மற்றும் SMC உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட விழாவில் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பள்ளிக்கென புதிய பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது. கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் இடம்பெற்ற மாணவிக்கும், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்த, வகுப்பிற்கு இரண்டு மாணவர்களுக்கும் Sheild வழங்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் Trophy வழங்கப்பட்டது. SMC உறுப்பினர்களுக்கு sheild வழங்கப்பட்டது. மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள், யோகா போன்றவை நிகழ்த்தப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் தங்கமணி தலைமையில் ஆசிரியர்கள் ஜாய்சி, ஜெரோலின், விஜயா, அமுதா, ஹெர்மினா, ஆக்சிலியா, பூமா, சுதா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.