நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 754 மாணவ – மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் :
நிறுவனர் கிளிட்டஸ் பாபு வழங்கினார்!
நெல்லை வண்ணார்ப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 754 பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டில் நடைபெற்ற விழாவுக்கு நிறுவனர் முனைவர். கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த ஆண்டு டிசி.எஸ்., இன்போசிஸ், ஹச்.சி.எல், கார் டெக்னோலஜி, சோகோ, சி.டி எஸ்., மாவ்டே டெக், சுசி சிஸ்டம்ஸ், சேவ் மாம், ஆர்ஷன், ப்ளூ பிரிட்ஜ், ஜென் ரோபோடிக்ஸ், ம்யூசிக்மா, ஹெக்சாவார், டெல்பி டிவிஎஸ் மதர்சன் ஆட்டோமோட்டிவ், ஒயாசிஸ் ஆட்டோமேஷன், பன்னாட்டு நிறுவனங்களான பின்னாகில் இன்டர்நேஷனல், ஆட்டோம் இன்டர்நேஷனல், ஆனந்தா எலெக்ட்ரோ மெக் ஒர்க் மற்றும் திரன் டெக், சாப்ட் சுரே டெக்னோலஜி, வின்ட்ரோனிக்ஸ், ஸ்கில் ரேங்க் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் இருந்து 754 பணி நியமன ஆணைகளை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக ரூ 17.5 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

இதற்கான ஆணைகளை நிறுவனர் முனைவர் .கிளிட்டஸ் பாபு மாணவ, மாணவியருக்கு வழங்கி பாராட்டினார்.
விழாவில் பேசிய நிறுவனர், வேலைவாய்ப்பு ஆணைகளை பெற்ற உங்கள் எல்லோரையும் பாராட்டுகிறேன். இதற்காக உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்களும் கல்லூரியில் நன்கு படித்து, திறனை வளர்த்துக்கொண்டு வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறீர்கள். பணி புரியும் நிறுவனங்களில் கடினமாக உழைத்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் வெற்றியின் தொடக்கம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறோம் என்று கூறினார்.
இயக்குநர்கள் ஜான்கென்னடி, முகமது சாதிக் ஆகியோர் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும் என்றனர்.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது பாராட்டுக்களை கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.இந்த விழாவில் ஸ்காட் கல்வி குழும பொதுமேலாளர் முனைவர். ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, இயக்குநர் முகமது சாதிக், தொழில்முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் அன்னப்பாண்டி, வளாக மேலாளர் பேராசிரியர் சகரியா கேப்ரியல் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.












