கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், மனோ கல்லூரியின் இயக்குனருமான வெளியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

பல்கலைகழக அளவில் பதக்கம் வென்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி அளவில் முதல் இடம் பெற்ற பட்டதாரிகள் கைகளில் வெற்றிக்கொடி ஏந்தி துறைத்தலைவர்களோடு அணிவகுத்து வந்த இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் விஜயன் முன்னிலை வகித்தார்.

உண்ணாமலை கல்லூரியின் முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி தலைமைதாங்கி, ஆண்டறிக்கையினை வாசித்தார்.

உண்ணாமலை தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவீந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பட்டதாரிகளின் வாழ்வில் முதல்முறை நடக்கும் இந்த நிகழ்வில் தொண்ணூறு பட்டதாரிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஒருங்கிணைப்பாளர்களான அருண்குமார், முத்துராஜா மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், துறைதலைவர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.