தூத்துக்குடி விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா

தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் அமைந்துள்ள விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியை கனகரத்தினமணி வரவேற்புரை வழங்கினார் ஹங்கேரி நாட்டின் தொழிலதிபர் அரவிந்தகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

தலைமை உரைக்குப் பின் அவரும் அவரது துணைவியார் காயத்ரி சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

மேலும் இவ்வாண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள், வெற்றிக்கு உழைத்திட்ட தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகளைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இறுதியில் உதவி தலைமை ஆசிரியை மேரி சீதா நன்றி உரையாற்றினார்.