அரசுப் பள்ளிகள் மூடல் : இந்தியாவில் 89, 441, தமிழ்நாட்டில் – 239 பள்ளிகள்

அரசுப் பள்ளிகள் மூடல் :
இந்தியாவில் 89, 441, தமிழ்நாட்டில் – 239 பள்ளிகள்

2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 89, 441 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக இந்தியாவில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.இதற்கு அடுத்துதான் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர்.

ஆனால் இந்த நிலை தற்போது மாறி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகள் அதிகம் ஆக உள்ளன.
அடுத்ததாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்த நிலையில் 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை எத்தனை அரசு பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறித்த விபரத்தை மத்திய கல்வி துறை அமைச்சகம் புள்ளி விபரமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிக அரசு பள்ளிகள் உள்ள மத்திய பிரதேச மாநிலம் தான் அதிக பள்ளிகளையும் மூடி உள்ளன. அதாவது 2014 முதல் 2024 ஆண்டு வரையான காலகட்டத்தில் சுமார் 29,410 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

மாநிலங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்ட விபரம் :

உத்தரபிரதேசம்- 25,126
ஒடிசா – 10,026

அசாம் -7,919

ஜார்கண்ட் – 5,527

ஜம்மு காஷ்மீர் – 5,089
பீகார் – 3,829

மகாராஷ்டிரா – 2,560
ஆந்திரா – 1,666

உத்தரகாண்ட் – 1552

பஞ்சாப்- 1,530,
கர்நாடகா – 1180

தெலுங்கானா- 754
கேரளா – 295 பள்ளிகளும்

தமிழ்நாட்டில் 239 பள்ளிகளும் மூடப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

புதுச்சேரிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த அளவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு தனியார் பள்ளிகளின் வைக்கும் மாணவர்கள் அதிகம் செல்வதால் அதிக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் பள்ளிமாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருவதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.அதன் காரணமாக தமிழ்நாடு அரசு பள்ளிகள் அதிக அளவில் மூடுவது கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணங்கள் :

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மாணவர்களின் எண்ணிக்கை குறைவு, ஆசிரியர்கள் பற்றாக்குறை, மற்றும் பள்ளிக் கட்டடங்களின் மோசமான நிலை. இது தவிர, நிதிப் பற்றாக்குறை மற்றும் அருகருகே பள்ளிகள் இருப்பதால் சில பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பது போன்ற காரணங்களும் உள்ளன.