கோவில்பட்டி கே. ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதார் புதுப்பிக்கும் சிறப்புமுகாம்
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 132 மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து 14.07.2025 அன்று ஆதார் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை கல்லூரி முதல்வர் தலைமை வகித்து துவங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.
இம்முகமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.












