மார்சல் நேசமணி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி: இன்று நடைபெறுகிறது

தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்சல் நேசமணியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்வு நடைபெறுகிறது.
தூத்துக்குடி,ஆரோக்கியபுரம் வி வி டி நினைவு ஆரம்பப் பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு மார்சல் நேசமணியின் பிறந்தநாளை ( 12 – 06 – 2025 ) முன்னிட்டு செல்போனினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறி புத்தகங்களை வாசிக்க சொல்லும் பொம்மலாட்ட நிகழ்வு. இன்று காலை 9.30 க்கு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெய வேணி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிலுவை மற்றும் தூத்துக்குடி மாமன்ற ஐந்தாவது வார்டு உறுப்பினர் அந்தோணி பிரகாஷ் மார்சிலின் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
தூத்துக்குடியில் கலையின் குரல் நிறுவனர் சக்திவேல் மற்றும் குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து இந்த பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் செய்கின்றது.












