தேசிய அளவிலான 62 வது ஸ்கேட்டிங் : தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்: அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டினார்

தேசிய அளவிலான 62 வது ஸ்கேட்டிங் :
தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்: அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டினார்

ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக 62 ஆவது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்லைன் கிளாசிக்கல் சைலம் ஜோடி 17 வயதிற்கு மேல் பிரிவில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சந்தோஷ் ராஜா வெண்கலப் பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

மாணவன் சந்தோஷ் ராஜா தூத்துக்குடி ஷாரா ஸ்கேட்டிங் கிளப்பில் பயிற்சி பெற்றவர்.

மாணவன் சந்தோஷ் ராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு அமைச்சர்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இரட்டையர் பிரிவில் 3 லட்சம் இரண்டு பங்குகளாக வழங்கி கௌரவ படுத்தினார்கள்.

மேலும் மானவனை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் இஆப‌ பாராட்டினார்கள்.

பள்ளியின் சார்பாக தாளாளர் வழக்கறிஞர்.சொர்ணலதா, தலைமை ஆசிரியர் மாரியப்பன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

மாணவனை ஸ்கேட்டிங் தலைமை பயிற்சியாளர் ஷாரா முபாரக்,  ஷாரா கலை பயிற்சி பள்ளி இயக்குனர் ஷநவாஸ், பள்ளி விளையாட்டு ஆசிரியர் குப்புசாமி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெய ரத்தின ராஜன்,
தூத்துக்குடி மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் சங்கர் மற்றும் மாணவனின் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.