நாளை குரூப் – 4 தேர்வு :
தனியார் பேருந்துகளில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நாளை ஜீலை 12 காலை நடைபெறுகிறது.
இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்பதற்கு டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த போட்டி தேர்வு நாளை காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 38 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேரும்,மூன்றாம் பாலினத்தவர் 117 பேரும் என ஒட்டுமொத்தமாக 13,89,738 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன.

இந்த முறை வினாத்தாள்களை தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். முன்னதாக அதிகாரிகள் தனியார் பேருந்தின் கதவுளுக்கு சீல் வைத்தனர்.
வழக்கமாக அரசு தேர்வின் போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாளர்கள் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பேருந்துகளின் கதவு மற்றும் அவசர வழி கதவுளுக்கு “எ4” பேப்பர் சீட் ஒட்டி சீல் வைத்து பாதுகாப்பாக வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தனியார் பேருந்துகளில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்புள்ளதாக சமூகவலைதளத்தின் செய்திகள் வெளியானது
தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஎன்பிசி தலைவர் விளக்கம் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியதாவது tnpsc குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை. தேர்வர்கள் அச்சப்பட தேவை இல்லை தனியார் பேருந்து மூலம் வினாத்தாள்களை எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.












