தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் எழுதிய ஆய்வு நூல் வெளியீடு


தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, கணிதத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர். ஜாக்சன் எழுதிய “A Book on Fuzzy Mathematics” எனும் ஆய்வுநூல் வெளியிடப்பட்டது.
இந்த நூலை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வெளியிட , IQAC ஒருங்கிணைப்பாளர்களான முனைவர்.ஜான் பிரின்ஸ் சௌந்தரநாயகம், முனைவர். ராதிகா மற்றும் கணிதத் துறைத் தலைவர் முனைவர். மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த நூல் வெளியீடு கல்லூரியின் பவள விழாவில் வெளியிடப்படுவது பெருமைமிக்கது. கல்லூரியின் பாரம்பரியத்தையும், ஆசிரியர் பெருமக்களின் முன்னோக்கிய புலமைத்தையும் பிரதிபலிக்கிறது.
முனைவர். ஜாக்சனுக்கு அவரின் அனைத்து அறிவியல் மற்றும் கல்விச் செயல்பாடுகளிலும் தொடர்ந்த வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இந்த நூல் பலருக்கு தூண்டுதலாக இருந்து, வ.உ. சிதம்பரம் கல்லூரியின் கல்வித் தரத்துக்கு ஒரு பெருமைமிக்க பங்களிப்பாக விளங்கும் என கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வாழ்த்தினார்.












