தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் அறிவியல் கழகம் சார்பாக 26.02.26 அன்று அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு அறிவியலில் பெண்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் அணி வகுப்பு, விவாதம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், வினாடி வினா, மைம் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியை ஏ.பி.சி. வீரபாகு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வ.உ.சி. கல்வியியல் கல்லூரி இளங்கலை கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் கல்விக் கழக நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியை கண்டு கழித்தனர்.

முன்னதாக பேராசிரியர் குரு வாசுகி அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் கவிதா நோக்கவுரை ஆற்றினார். பாரதியார் வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கோமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் கனகராஜ் தங்கவேல் தலைமை உரையாற்றினார். பேராசிரியர் ரூபினா தன சுதா அறிக்கை வாசித்தார்.
பேராசிரியர் அல்லிமுத்து நன்றியுரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முதல்வர் தலைமையில் செய்திருந்தனர்.













