தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று துவங்கியது
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 7 ம் தேதி தொடங்கி மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது.

சிறப்பு பிரிவினருக்கான தர வரிசை பட்டியல் மே 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4 ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 176 (180 ) அரசு கலை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்1,84,762 மாணவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர்.
இந்த ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்பிற்காக மாணவ, மாணவிகள் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர் அதற்குப் பிறகு பி ஏ தமிழ், காமர்ஸ் (பிகாம் ),ஆங்கிலம், பிபிஏ ஆகிய படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டு போலவே பி.எஸ்.சி கணித படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைகள் மிகக் குறைந்த அளவே இருந்தது.
இந்நிலையில்.செமஸ்டர் தேர்வுக்கு பிறகு கல்லூரிகளுக்கு ஒரு மாதங்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டது. அதன்பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று தொடங்கப்பட்டன. மேலும் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகளும் இன்று துவங்கி உள்ளது.

கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.அதற்கான தொடர் மற்றும் தொடரா செலவினத்துக்காக ரூபாய் 25 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் மேலும் கடந்த கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் கே வி குப்பம்,திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் புதிய அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிதாக 2025 = 2026 ம் கல்வி ஆண்டில் திறக்கப்பட்டுள்ள 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 5 பாட பிரிவுகளுடன் தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதற்கான மொத்த செலவுத்தொகை சுமார் 33 கோடியே 94 லட்ச ரூபாய் ஆகும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 4,170 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் 176 அரசு கலை மற்றும் பொது அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4 கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதனால் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.












