“தி வீக்” தரவரிசை – 2025 தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி சாதனை

“தி வீக்” தரவரிசை – 2025 தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி சாதனை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் 75 வது பவள விழாக்கொண்டாட்டத்தில் மேலும் ஒரு சாதனை படைத்து அசத்தியுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரி, THE WEEK Rankings – Hansa Research Survey 2025 தரவரிசையில் சிறந்த இடங்களை பிடித்துள்ளது.

🎓 கலைத்துறை (BA) – 56வது இடம்

🔬 அறிவியல் (B.Sc) – 50வது இடம்

💼 வாணிபம் (B.Com) – 69வது இடம்

இந்த சாதனை எங்கள் சிறப்பான நிர்வாகமும், மாண்புமிகு செயலாளரின் வழிகாட்டலும், நமது ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் உழைப்பும், கல்வித் துறையில் மேன்மையை நோக்கி கூட்டு முயற்சியுடனும் அடையப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கூறினார்.

மேலும் இதற்கானகல்லூரி தரவுகளைத் , தொகுத்து வழங்க பேராசிரியர்கள் கொண்ட குழுவினை கல்லூரி அமைத்தது.அதனடிப்படையில் குழுவில் இடம்பெற்ற

பேராசிரியர். ஐயாதுரை,

டாக்டர். முத்துசாமி,

டாக்டர். ஆவுடைச்செல்வி,

டாக்டர். செல்லபாண்டியன்,

டாக்டர். ராஜ்குமார்,

டாக்டர். திரவியம் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

நாம் இந்த பவள விழா ஆண்டினை கொண்டாடும் வேளையில், இதே ஒருமைப்பாட்டையும் திறமையையும் கொண்டு தொடர்ந்தும் முன்னேறுவோம்.

எங்கள் அனைத்து முயற்சிகளிலும் உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறோம் எனறார் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு.