TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் : அடுத்த தேர்வு விரைவில் : இந்த ஆண்டில் மேலும் 12,236 பணிகள் நிரப்பப்பட உள்ளது, டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்

TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் :
அடுத்த தேர்வு விரைவில் :
இந்த ஆண்டில் மேலும் 12,236 பணிகள் நிரப்பப்பட உள்ளது,
டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்

குரூப் – 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் இன்றைய தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 44 இடங்களில் ( 38 மாவட்டங்கள் கூடுதலாக 6 தாலுகாக்கள் ) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதியுள்ளனர். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

போட்டோ நன்றி சமயம் தமிழ்

2 மாதத்தில் முடிவுகள் :

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் குரூப் – 1 தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடப்பதை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாணவர்கள் குரூப் – 1 தேர்வில் எளிதாக தேர்வை எழுதுவதற்காக விடைத்தாள் எளிதில் பதில் அளிக்கும் வகையில் தேர்வு தாள் வடிவமாக்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்வுக்கு இரண்டு மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த ஆண்டில் மேலும் 12,236 பணி இடங்கள் :

மேலும் அடுத்த தேர்வு அறிவிக்கப்பட்டு பணிகள் நடக்கும்.இந்த ஆண்டில் மேலும் 12236 டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியது இருக்கிறது.” என்று கூறினார்.