கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 26.07.2025 சனிக்கிழமை அன்று அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பள்ளி கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளர்,வின் யுவர் வீக்னெஸ் மோட்டிவேஷன் அகடமி ( win your weakness Motivational Academy ) யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.ஜெகன் இருதயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் அய்யனார் தலைமை தாங்குகிறார்.
பள்ளி மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற நிர்வாகம் அழைக்கிறது.













