தூத்துக்குடி மாவட்டம் நடுநிலைப் பள்ளிகளில் 2025 -2026 ஆம் புதிய கல்வி ஆண்டில் மாணவர்களை வரவேற்கும் விழா
பனையூர்:
தூத்துக்குடி மாவட்டம் பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டில், பள்ளி தலமையாசிரியை மரிய அனிதா தலைமையில் அனைத்து மாணவர்களையும் இன்முகத்துடன் வரவேற்று சந்தனம், குங்குமம் வைத்து, பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும்,அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கை குலுக்கியும், வாழ்த்துக்கள் சொல்லியும் வரவேற்றனர்.
மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் திலகசெல்வி, அற்புதசகாயராஜா, பரமேஸ்வரி, சத்தியஜோதி கோடீஸ்வரி, மலர்விழி, சங்கரஸ்வரி உடனிருந்தனர்.
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி :

தூத்துக்குடி வடபத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில் பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு தலையில் கிரீடம் அணிவித்து, நெற்றியில் குங்குமம், சந்தனமிட்டு இனிப்புகள் வழங்கி தலைமை ஆசிரியை தங்கமணி,ஆசிரியைகள் ஹெர்மினா,ஜாய்ஸ்,ஜெரோலின்,வசந்தா கிறிஸ்டிபாய் மற்றும் சிறப்பு பயிற்றுனர் ராஜா சண்முகம் செய்தனர்.












