விண்ணப்பிக்க இன்றே கடைசி :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு
தமிழகத்தில் இருக்கும் பல்வேறு பதவிகளுக்காக எழுதும் தேர்வுகளில் குரூப் 4 தேர்வு தான் அதிகமாக எழுதும் தேர்வாகும்.மிகவும் எளிதான தேர்வும் இதுவே ஆகும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கான 3935 காலி பணியிடங்களை நிரப்பு குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது.
தேர்வர்கள் 25 -04- 2021 முதல் 24- 5 -2025 வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒரே கட்ட தேர்வுக்கான தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் இத்தேர்வினை லட்சக்கணக்கான பேர் எழுதி வருகின்றனர்.
வயதுவரம்பு:
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்த பட்சம் 21 முதல் 42 வரையும், வனக்காப்பாளர், வனக்காவலர் பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 முதல் 37 வரை மற்ற பதவிகளுக்கு வயது 18 முதல் 34 வரை இருக்கலாம்.
மேலும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. இந்த குரூப் 4 தேர்வு ஒரே கட்டமாக எழுதும் தேர்வாகும்.
கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.
இணையதளம் முகவரி:
https//www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 ஆகும்.
கடைசி நாள்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று 24 5 2025 சனிக்கிழமை கடைசி நாளாகும்.












