இரண்டு மாநிலங்களின் உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இளநிலை நீட் தேர்வு 2025 முடிவு திட்டமிட்டபடி ஜுன் 14 க்குள் வெளியாகுமா?

  1. இரண்டு மாநிலங்களின் உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இளநிலை நீட் தேர்வு 2025 முடிவு திட்டமிட்டபடி ஜுன் 14 க்குள் வெளியாகுமா?

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் (NEET UG 2025) தேர்வு கடந்த மே 4-ம் தேதி தேசிய அளவில் ஒரே கட்டமாக ஓ.எம்.ஆர் தாளில் நடைபெற்றது. இத்தேர்வு நாடு முழுவதும் இருந்து சுமார் 23 லட்சம் பேர் எழுதினர். அதே போன்று, தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் 5,453 தேர்வு மையங்களும், 13 வெளிநாடுகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் மொத்தம் 44 தேர்வு மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த செய்தி மாணவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடை விதிக்க காரணம் என்ன?

நீட் தேர்வின்போது இந்தூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 12 தேர்வு மையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த தேர்வு மையங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் தேர்வின்போது ஏராளமான மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

போட்டோ நன்றி பி. பி. சி

அவரின் மனுவில், 3.30 மணி அளவில் மினசாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார துண்டிப்பினால் தேர்வை சரியாக எழுதாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும். தேர்வு முடிய வெறும் 30 நிமிடங்களுக்கு முன்புதான் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டது என கூறியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான போதிய அடிப்படை வசதிகளுக்கான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை என உறுதிப்படுத்தியது. மேலும்,

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அதுவரை வழக்கு விசாரணையை தள்ளிவைத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம் தடை

தற்போது மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை சுமார் 4 வாரங்களுக்கு பின்புதான் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிப்பதை தொடர்ந்து, வழக்கின் போக்கின் அடிப்படையில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீட் தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியாகுமா இல்லை தாமதமாகுமா என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதித்துள்ளது.

நீட் தேர்வின்போது சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆவடியில் உள்ள கேந்திரிய வித்தியாலயா சி. ஆர். பி. எப் மையத்தில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் ( 3.00 – 4.15 ) மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீட் தேர்வு மையத்தில் புகுந்துள்ளது. இதனால் மாணவர்கள் சரியாக தேர்வெழுத முடியவில்லை என கூறி மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இதற்கு விளக்கமளிக்க உத்தவிட்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தது.

நீட் தேர்வு முடிவுகள் 2025

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 14-ம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், இரண்டு மாநிலங்களில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுவரை தேசிய தேர்வு முகமை இந்த நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்ற உத்தவினால், நீட் தேர்வு முடிவுகள் தாமதமாகுமா என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது