தூத்துக்குடி தருவைகுளத்தில் கோடை கால பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள தருவைகுளம் கிராமத்தில் தூய மைக்கேல் கைப்பந்து பயிற்சி கழகம் சார்பில் 14வது ஆண்டாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
தருவைகுளம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் 110 பேர் இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இங்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.
தருவைக்குளத்தைச் சேர்ந்த சூசைமரிய அந்தோணி முத்து மைக்கேலம்மாள் நினைவு டிரஸ்ட் மற்றும் ஷாகுல்,செல்வின் பிரபு தொழில் அதிபர்கள் உதவி செய்கிறார்கள்.
மேலேம் தூத்துக்குடி தொழிலதிபர் ராம்ராஜ் சீருடை வழங்கி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர் கீதா ஜீவனின் மகன் டாக்டர் மகிழ் ஜான் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.
பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் பயிற்சி ஆசிரியர் ரவிகாந்த் இடம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு மைதானம் மாதிரி தருவைக் குளத்திலும் கைப்பந்து பயிற்சி பெற அனைத்து வசதிகளும் கொண்ட. மைதானம் அமைத்து தர மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்












