தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலத் திறனை வளர்க்க ” ENG – FEST 25 ” போட்டி

16.04.2025 அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியின் ஆங்கில இலக்கிய சங்கம் சார்பாக மாணவ-ஆசிரியர்களின் ஆங்கிலத் திறனை வளர்ப்பதற்கு ‘ENG-FEST 25’ என்ற துறைகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சி இறைவணக்க பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியை முதல்வர் முனைவர் கனகராஜ் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாணவ-ஆசிரியர்களின் கையெழுத்துத் திறனில் அழகியல் உணர்வைச் சோதிக்க 15.04.2025 அன்று “Penmanship Pride” என்ற நிகழ்வின் மூலம் மாணவ-ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

16.04.2025 அன்று ஆசிரிய மாணவர்கள் ஆங்கில புலமை பெற்றிட டிஜிட்டல் கதை சொல்லல் (Digital Story Telling), நாடக வெளிப்பாடு (Dramatic Flair), கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைத்தல் (Step into Character), சொற்பொழிவின் சக்தி (The Power of Eloquence) போன்ற மேடை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. நிகழ்வுகளின் நடுவர்களாக கல்லூரியின் முன்னாள் மாணவிகளான செல்வி.ஐலின் மற்றும் செல்வி.க்ஷோபனா தேவி ஆகியோர் இருந்தனர். அனைத்துத் துறை மாணவ-ஆசிரியர்களும் நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் ஆங்கிலத் துறை மாணவர்களால் பாலே நடனம், இலக்கிய அணிவகுப்பு மற்றும் சார்லி சாப்ளின் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவ-ஆசிரியர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த சாம்பியன்க்ஷிப்பை கணிதத் துறை ஆசிரிய மாணவர்கள் வென்றனர். இறுதியாக ‘ ENG-FEST– 25’ வெற்றிகரமாக தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சிகளை ஆங்கில உதவிப் பேராசிரியர் பிரியா வழிகாட்டுதலுடன் ஆங்கிலத்துறை மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.