முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு – முக்கிய அறிவிப்பு!

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு – முக்கிய அறிவிப்பு!

2023-24, 2024-25 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் பாடங்கள்:

07.02.2026 (சனிக்கிழமை): தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல்.

09.02.2026 (திங்கட்கிழமை) :

தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல்.

கலந்தாய்வு நடைபெறும் இடம்:

விண்ணப்பதாரர்களின் வீட்டு முகவரி அடிப்படையில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறும்.

கொண்டு செல்ல வேண்டிய அசல் சான்றிதழ்கள்:

கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.

10 மற்றும் & 12 ம் வகுப்பு சான்றிதழ்கள்

இளங்கலை (UG), முதுகலை (PG) & பி.எட் (B.Ed) பட்டச் சான்றிதழ்கள்

சாதிச் சான்றிதழ் (Community Certificate)

PSTM சான்றிதழ் (பொருந்தினால்)

மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்தினால்)

பணி நியமன ஆணை :

பணி நியமன ஆணைகள் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.