தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கல்லூரி கனவு நிகழ்வு இன்று தொடங்கியது.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கல்லூரி கனவு நிகழ்வுக்கு வந்திருந்த மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றார்.
அதன் பின் கல்லூரி பற்றிய தகவல் விளக்க படம் , துறை சார்ந்த கருத்துரைகள், அறிவியல் துறைகள் ஆய்வக பார்வையிடல், நூலகம் விளையாட்டரங்கம் மற்றும் கலைத்துறை உள்ளிட்ட கல்லூரி உட்கட்டமைப்பு வசதிகள் பார்வையிடல் ஆகியன நடைபெற்றன.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில்,
வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர்..வீரபாகு தலைமையில், துறை தலைவர்கள் ஒத்துழைப்பில் , கல்லூரி கனவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஜாக்சன், இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர். கிருஷ்ண பிரியா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்தக் கல்லூரி கனவு நிகழ்ச்சியால் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் கல்லூரிக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு தான் எந்த கல்லூரியில் படிக்கலாம், தான் படிக்க இருக்கும் கல்லூரியின் சிறப்பம்சங்கள் என்ன என்பதனை அறிந்து ஆர்வத்துடன் தாங்கள் விரும்பிய கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை தொடங்குவதற்காக இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.













