படிப்பில் பின் தங்கிய மாணவர்களும் அரசு வேலையில் அமரலாம்.

பள்ளி பருவத்தின் கல்வியே இன்றைய மாணவர்களின் நாளைய வாழ்க்கையை முடிவு செய்கிறது.

அதுவும் அரசு பொதுத் தேர்வான பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிப்பு தான் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான படிப்பாகும். இருந்தாலும் மாணவர்களை பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்கள் இல்லாமல் படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறாமல் வற்புறுத்தி அவர்களை படிக்க வைக்கின்றனர்.

பெற்றோர்கள் தனது குழந்தைகள் எதை விரும்பி படிப்பார்கள் அவர்களுக்கு எந்த பாடங்கள் விருப்ப பாடமாக இருக்கிறது என்பது அறியாமல் கல்வியை வற்புறுத்துவதால் அனைத்து மாணவர்களாலும் பாடங்களை மிக எளிதாக படிக்க முடிவதில்லை.

மேலும் குழந்தைகள் விருப்பம் இல்லாமல் படிக்கும் பொழுது அவர்கள் மனதளவில் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை ஒரு டாக்டராகவோ! இன்ஜினியராகவோ! கலெக்டராகவோ! ஆக வேண்டும் என்ற கனவில் மட்டுமே மிதந்து வருகின்றனர் முதலில் அந்த எண்ணத்தை பெற்றவர்கள் தூக்கி எறிய வேண்டும்.

படிக்கும் அனைத்து மாணவர்களும் டாக்டராகவோ! என்ஜினியராகவோ! கலெக்டராகவோ ஆக வேண்டும் என்றால் அது நிச்சயமாக முடியாத காரியம் ஆகும்.எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் விருப்ப பாடத்தை அறிந்து அவர்களுடைய விருப்பத்தையும் நோக்கத்தையும் கூர்ந்து கவனித்து தனது குழந்தைகளை என்ன படித்தால் அந்த படிப்பில் வெற்றி பெறுவார்கள் அதில் சாதனை புரிவார்கள் என்று எண்ணி அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும்.

மிகவும் நன்றாக படிக்கும் மாணவர்கள் தாங்கள் நினைத்த வேலையை படித்து அந்த வேலையில் அமர்ந்து சாதனை படைக்கின்றனர்.

தனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று எந்த மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். பெற்றோர்களும் தனது குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்று வருத்தப்படாதீர்கள்.

தனது குழந்தைகள் படிப்பில் பின் தங்கி இருந்தால் அவர்களை நீங்கள் தான் வழிநடத்த வேண்டும். சுமாராக படிக்கும் உங்கள் குழந்தைகளை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு அவர்களை குரூப் 4 தேர்வு எழுத தயார்படுத்த வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு (SSLC)வரை படித்தால் மட்டும் போதுமானது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 18 வயது பூர்த்தி அடைந்தால் குரூப்-4 தேர்வை எழுதலாம்.
குரூப் 4 தேர்வு மிகவும் எளிதான தேர்வாகும்.

குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய தேர்வாகும்.

இந்த தேர்வினை எழுதி அதில் வெற்றி பெற்றால் மாணவர்கள் மேற்கண்ட வேலையில் அமரலாம்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவுடன் குரூப் 4 தேர்வு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தும் அகாடமியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்துக் கொண்டால் குருப் 4 தேர்வில் வெற்றி பெறுவது உறுதியாகும்.

எனவே மாணவர்கள் ஏதாவது ஒரு அகடமியை தேர்ந்தெடுத்து பயிற்சி வகுப்புக்கு தவறாமல் சென்று படிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி தேர்வினை எழுதி முடித்தவுடன் அவர்களை அகடமியில் சேர்த்து படிக்க வைக்கவும்.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிப்பது போன்று அவர்கள் அகடமியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக் கொண்டால் படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் நிச்சயமாக குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர்வது நிச்சயம்.

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் பல்வேறு அரசுப் பணியிடங்கள் கிடைக்கும். இதில் கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer – VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் (Typist), வனக் காவலர் போன்ற பதவிகள் அடங்கும்.
குரூப் 4 தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள்:
கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer – VAO): கிராம நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வது.
இளநிலை உதவியாளர்:
அலுவலகப் பணிகளில் உதவி செய்வது, ஆவணங்களை பராமரிப்பது போன்றவை.
தட்டச்சர் (Typist):


ஆவணங்களை தட்டச்சு செய்தல், கணினிப் பணிகளை மேற்கொள்வது போன்றவை.
வனக் காவலர்:


வனப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது.
சுருக்கெழுத்தர்:
சுருக்கங்களை எழுதிக் கொடுத்தல்.
வனப்பாதுகாவலர்:
வனப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது.
இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் அரசுப் பணியில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், குறைந்தபட்ச ஊதியம் ரூ 16,600 முதல் அதிகபட்சமாக ரூ 75,900 வரை சம்பளம் பெறலாம்.

2025-ல், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25, 2025 அன்று வெளியாகும்.
குரூப் 4 தேர்வு ஜூலை 13, 2025 அன்று நடத்தப்படும்.
அறிவிப்பு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2025 தேர்வுக்கான அறிவிப்பு, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதி,

எஸ்.எஸ்.எல்.சி (SSC) அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் எஸ்.எஸ்.எல்.சி (SSC) அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன.
குடியுரிமை:
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
பிறப்பு சான்று:
விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதியினை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது தவிர 10 ம் வகுப்பு முடித்தவுடன் காவலர் தேர்வுக்கு உடற்தகுதி இருந்தால் தேர்வுக்கு தயாராகி காவலர் ( police ) ஆகலாம்.

காவலர் தேர்வுக்குத் தயாராவது என்பது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்வு. இந்த தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி, உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை காவலர் தேர்வின் ஒரு பகுதியாகும்.
காவலர் தேர்வுக்குத் தேவையான படிப்பு:


1. கல்வித் தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. உடற்தகுதி:
தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
3. எழுத்துத் தேர்வு:
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிதல் மற்றும் உளவியல் போன்ற பாடங்களில் வினாக்கள் கேட்கப்படும்.
4. நேர்முகத் தேர்வு:
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வுக்கான தயாரிப்பு:
1. 10-ம் வகுப்பு பாடத்திட்டம்:
10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும்.
2. பொது அறிவு:
பொது அறிவு பாடங்களை நன்கு படிக்க வேண்டும்.
3. திறனறிதல்:
எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு போன்ற பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும்.
4. உளவியல்:
தொடர்புகொள் திறன், தகவல்களைக் கையாளும் திறன் போன்ற உளவியல் பாடங்களை பயிற்சி செய்ய வேண்டும்.
5. உடற்தகுதி:
ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற உடற்தகுதி பயிற்சிகளை செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாணவ படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி தாங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆசிரியர்

கல்விச் செய்திகள்