தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி “சரித்திரா 2K26” சாம்பியன்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் நடைபெற்ற சரித்திர 2K26- கல்லூரிகளுக்கு இடையேயான கவின் கலை போட்டியில் வ. உ. சி.கல்வியியல் கல்லூரி மாணவர்கள் முதல் இடம் பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்கள்.
மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற இக்கலைப் போட்டியில், மாணவி வசந்தகுமாரி பேச்சுப் போட்டியில் முதலிடத்தையும், பட்டிமன்றத்தில் பெபினா மற்றும் வசந்தகுமாரி முதலிடத்தையும், சண்முக கணேசன் தனிப்பாடலில் முதலிடத்தையும், ஜோஸ்பின் கட்டுரைப்போட்டியில் முதலிடத்தையும், ஜோன்ஸ் கிருபா கவிதை போட்டியில் முதலிடத்தையும், ஏஞ்சல் செல்சவியா புகைப்படப் போட்டியில் முதலிடத்தையும், நூர் நிஷா மற்றும் நூஹா பேகம் மருதாணி இடுதலில் முதலிடத்தையும், ராஜா கோமதி மற்றும் குழுவினர் குழு நடனத்தில் முதலிடத்தையும் பெற்றனர் .

ஜார்ஜ் ஸ்வேதா தங்கம் மற்றும் சரஸ்வதி முக ஓவியத்தில் இரண்டாம் இடத்தையும், ஜெயமாரி மற்றும் அழகு சபரி கணேசன் ரங்கோலியில் இரண்டாம் இடத்தையும், அருணாச்சலம், ஜெய்சன் ஜெபா ஆஸ்வெல்ட், ஆண்டனி சஞ்சய் மற்றும் குழுவினர் பழைய வரலாற்று நிகழ்வுகளை நடித்துக் காட்டுதலில் இரண்டாம் இடத்தையும் மற்றும் ராஜேஸ்வரி மோனிஷா மற்றும் ஹரிதா குழுவினர் மௌன மொழி நாடகத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும், வ உ சி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற்று அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களையும், நிகழ்ச்சி பொறுப்பாளர்களான முனைவர். பிரேமலதா, பிரியா, முனைவர்.ராஜதுரை மற்றும் முனைவர்.பிளஸ்சி செல்வ அரசன் ஆகியோரை கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ், கல்லூரி செயலர் ஏ.பி.சி.வி. சண்முகம், கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டினார்கள்.













