100 ஆண்டுகளை கடந்த தூத்துக்குடி சி. வ. மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான மாநில எழுத்தறிவு விருது :
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
பள்ளிக்கல்வித் துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற சிறந்த பள்ளிக்கான மாநில எழுத்தறிவு விருதுக்கு தூத்துக்குடி நகர்ப்புறம் சி. வ.மாநகராட்சி தொடக்கப்பள்ளி சிறந்த எழுத்தறிவு மையமாக தேர்ந்தெடுக்கப் பட்டது.

சிறந்த மாநில எழுத்தறிவு விருதினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை ஆசிரியை ஜூலியா, ஆசிரியர் பயிற்றுநர் பார்வதி, தன்னார்வலர் மேக்டலின் ஆகியோரிடம் வழங்கி சிறப்பித்தார்கள்













