அன்றாட வாழ்வில் 30 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை நம்மை ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவுகிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலர் நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலைகள் மற்றும் கணினி முன் அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதன் விளைவாக நாளடைவில் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தினசரி உடற்பயிற்சி செய்வது ஒரு கடமையாக மாற வேண்டும். உடற்பயிற்சி உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. அவை இருதயத்தின் செயல்பாடு மேம்படுத்தும், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், நரம்பியல் அமைப்பு சீராக இயங்கும்,எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் உடற்பயிற்சி செய்வதால் மனநலம் மேம்படும். உடற்பயிற்சி நேரத்தில் வெளியேறும் என்டார்ஃபின் என்னும் ஹார்மோன் மனதிற்கு சந்தோஷ உணர்வை தருகிறது. அதனால் மன அழுத்தம்,கவலை, மனச்சோர்வு ஆகியவற்றை குறைக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. மூளையின் செயல்பாட்டை தூண்டும். உடற்பயிற்சி செய்யும் எளிய வழிகள் சில– தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி, மாடி ஏறுதல்,சைக்கிள் பயணம்,வீட்டு வேலைகள் செய்வது, வாரத்திற்கு தினமும் யோகா செய்வது.
உடற்பயிற்சி செய்ய வேண்டிய சரியான நேரங்கள் அதிகாலை 5:00 முதல் 7:00 வரை உடற்பயிற்சி செய்வது சிறந்தது. காலை உணவுக்கு முன்னால் செய்யும் உடற்பயிற்சி கொழுப்பை எளிதில் கரைக்கும் இரவில் தூங்கும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்பு உடற்பயிற்சி முடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை இன்றே தொடங்கி ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதலீடாக மாற்றுவோம்.
டாக்டர். ஜா மரிய டானி யூப் ஜூனோ MPT Neuro,
அன்னை வேளாங்கண்ணி பிசியோதெரபி கிளினிக்,
டாக்டர் பி எட்வின் ராயன் பவுண்டேஷன் தூத்துக்குடி.












