தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் கடல்சார் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு :

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் கடல்சார் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு :

தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடி சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து 20.09.2025 அன்று காலை 10.00 மணிக்கு CMFRI ( Central Marine Fisheries Research Institute ) தூத்துக்குடியில் கடல்சார் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்ச்சியில் ஒலிப்பார்வைக் காட்சி (AV Show) ஏற்பாடு செய்யப்பட்டு, கடல்சார் மாசுபாட்டின் காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது, கடல்சார் உயிரினங்களை காக்கும் அவசியம் மற்றும் கடற்கரை சூழல் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி செயலாளர் அருட் சகோதரி டாக்டர் குழந்தை தெரசா, முதல்வர் அரூட்சகோதரி டாக்டர். ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் அருட்சகோதரி டாக்டர். எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த டாக்டர் ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.