சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிதம்பரம் நகர் தபால் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய தபால் பெட்டி எழுதிய கடிதம் .என்ற புத்தகத்தை வழங்கினார்கள் இந்நிகழ்வில் ஆசிரியர் ஜெயபால் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சாய்ராம், அரசு மருத்துவமனை தூத்துக்குடி அசோக் குமார், சுங்க. இலாகா அதிகாரி தூத்துக்குடி மற்றும் நூலக மனிதர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . பொன் மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார்.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் தபால் அலுவலக ஊழியர்களுக்கு புத்தகம் பரிசு












