சாயர்புரம் டாக்டர் ஜி.யூ.போப் கல்வியியல் கல்லூரியில் சாரணர் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், டாக்டர் ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் சாரணர் – சாரணியர் (Scout) வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சங்கரன் ஆவுடையப்பன் (Scout Master) வழிநடத்தினார்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அம்சவேணி வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். அதன்பின் முதல்வர் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் விதமாக பொன்னாடை போற்றி கொளரவித்தார்.

தொடர்ந்து சங்கரன் ஆவுடையப்பன் (Scout Master) நிகழ்ச்சியை வழிநடத்தி பேசியபோது,
வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதைகளைப் பகிர்ந்தார். தன்னம்பிக்கை தரும் ஊக்கமளிக்கும் பாடல்களைப் பாடியும், ஆடியும் உற்சாகமூட்டினார்.
உயிர்காக்கும் முக்கிய குறிப்புகளை (life saving tips) வழங்கினார்.வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதனைப் பற்றி விளக்கினார்.

தன்னை சமுதாயத்தில் மேம்படுத்திக் கொள்வது எப்படியென்றும், தோல்வியை ஏற்றுக்கொண்டு முயற்சியை தொடர்வது பற்றியும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
மேலும், கடைசியாக தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் கயிறு மூலமாக உயிர்காக்கும் சில நடைமுறை திறன்களை (life saving tricks using rope) நேரடியாக மாணவ- மாணவியர்களின் பங்கேற்புடன் செய்து காட்டி விளக்கினார்.

நிகழ்ச்சியை முனைவர். பிரிஸ்ஸில்லா நன்றியுரை ஆற்றி முடித்துவைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.













