10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் : புத்தாண்டில் வழங்கப்படும் துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் :
புத்தாண்டில் வழங்கப்படும் துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் தேசிய தகவல் மையம் ஐஐடி சென்னை மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவைக் கொண்டு லேப்டாப் உற்பத்தி நிர்வாகத்திடம் 3 முறை கலந்தாய்வு கூட்டமும், 7 முறைக்கு மேல் வல்லுனர் குழு கூட்டமும் நடத்தி மாணவர்களுக்கு செய்யறிவு (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்) பயன்பாட்டிற்கு உகந்த வகையில் லேப்டாப் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப விவரங்களை முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல பல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தங்களுடைய பணியாளர்களுக்கு இனிமேல் தான் விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய தரத்திலான விண்டோஸ் 11 OS இப்போதே நமது மடிக்கணினியில் வழங்க இருக்கிறது.

இதற்கென எல்காட் நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாக ஓர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செயற்கை நுண்ணறிவுக்கு ஏஐ ( AI) ஏற்றவாறு அதிவேக பிராசஸர் மற்றும் நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.

அமெரிக்காவின் பெர்பிளெக்ஸிட்டி ( perplexity AI ) நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி 6 மாத காலத்திற்கு பெர்பிளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ ( perplexity pro AI ) வசதி கல்லூரி மாணவர்களுக்குஇலவசமாக வழங்கப்பட உள்ளது.

நாம் வாங்கக்கூடிய லேப்டாப்களும் சாதாரண நிறுவனங்களிடமிருந்து வாங்கவில்லை. உலக அளவில் தரத்திற்கு தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற டெல், ஏசர், ஹெச்பி ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே எந்த வித இடையீட்டு நிறுவனங்களும் இன்றி நேரடியாக கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

இப்படி தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு நம் அரசு வழங்குகிறது.

இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பல வீடுகளில் இன்று வரை நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே தொழில்நுட்பத்தை பற்றியும், தரத்தை பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை.

ஏற்கனவே காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், வெற்றி நிச்சயம் போன்ற திட்டங்களால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று இந்தியாவே பாராட்டும் நிலையில் லேப்டாப் வழங்கும் திட்டம் தமிழ்நாடு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உள்ளது.

அடுத்து நம்முடைய முதலமைச்சர் தலைமையில் திராவிடம் மாடல் 2.0 அரசு அமையும் போது மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இன்னும் பல திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்பது உறுதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.