*நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் !
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், தாளூர் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), தாளூரில் ஓணம் திருவிழா பாரம்பரிய சிறப்புடனும் கொண்டாடப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
ஓணம் திருவிழாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் அழகிய *பூக்களம்* அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியையும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வையும் வெளிப்படுத்தினர்.
இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாக இயக்குநர் மற்றும் செயலர் முனைவர். ராஷித் கசாலி பேராசிரியர் மோகன்பாபு மற்றும் மேலாளர் உமர் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

கல்லூரி நிர்வாகம், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவின் பண்பாட்டு பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் வகையில் இவ்விழா நடைபெற்றது. மாணவர்களிடையே ஒற்றுமை,நட்பு, கலாச்சாரப் புரிதல் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த நிகழ்வாக ஓணம் கொண்டாட்டம் அமைந்தது.












