தூத்துக்குடி நகர்புறம் டிட்டோஜாக் ஆர்ப்பாட்டம்!
ஆசிரியர்களின் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி நகர்ப்புறம் டிக்டோ ஜாக் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி நகர் புறம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி நகர் புறம் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஞானக்கண் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் லியோன் வசந்தி ஆகியோரின் கூட்டு தலைமையில் நடைபெற்றது. தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் லியோ வரவேற்றார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் மற்றும் டிட்டோஜாக் மாவட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பிரின்ஸ் கோரிக்கை விளக்கம் அளித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் புனிதா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் கவனத்தை ஏற்கும் பொருட்டு 20 அம்ச கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு மதிப்பெண் குறைத்தல், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுதல், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு, பழைய ஓய்வூதி திட்டம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமன ஒப்புதல் வழங்க கோருதல், அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புதல், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல், தணிக்கை தடையை நீக்குதல், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் என்பதை 10 சதவீதமாக உயர்த்தி உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கிட கோரிக்கை, ஊக்க ஊதிய உயர்வு 10.3.2020 முன் உயர் கல்வி பெற்றவர்களுக்கு விடுபட்டவர்களுக்கு வழங்குதல். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.












