தூத்துக்குடியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நினைவுப் பரிசு :
மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இ.ஆ.ப.வழங்கினார் !

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழா – 2026 மாவட்ட அளவிலான விழாவில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஜின் பேக்டரி ரோடு மாணவர்கள் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி அனைவரது பாராட்டையும் பெற்றது.
தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சி விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. மாணவர்களின் திறமை, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் பள்ளியின் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கூறியதாவது:
மாவட்ட ஆட்சியரிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரம், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பெற்றோர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ளது.
“மாணவர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்… பள்ளியின் பெருமைக்கு கிடைத்த மகுடம்!”
இந்த சிறப்பான நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் என்றார்.













