தூத்துக்குடி சக்தி விநாயகர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடியில் சிதம்பரநகர் பகுதியில் பாரம்பரியம் மிக்க பள்ளியாக சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலயா செயல் பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால் 1995ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி தூத்துக்குடியில் DSF வளாகத்தில் வைத்து ஜூலை 19ம் தேதி அன்று நடைபெற்றது.

இச்சந்திப்பிற்கு வெளிநாட்டிலிருந்தும் சென்னையிலிருந்தும் கொங்கு மண்டலத்திலிருந்தும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை, தூத்துக்குடியில் வாழும் மாணவர்கள் பொறுப்பேற்று நடத்தினர்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். பரஸ்பர நலம் விசாரிப்பிற்கு பிறகு பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், குடும்ப கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்த பள்ளிக்கும், ஏணிகளாக இருந்து ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பித்து, மாணவர்களை உயர்த்திய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவுக்கூர்ந்தனர்.

மதிய உணவிற்கு பின்னர் ஒரு சில விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பள்ளிக்கு சென்று அதன் முகப்பில் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் பயின்ற ஆசிரியர்கள், RDM கணக்கு டியுசன் மாஸ்டர் தட்சிணாமூர்த்தி சந்தித்தனர். பயின்ற காலத்தில் குடியிருந்த வீடு மற்றும் சுற்றத்தாரையும் கண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.
இது போன்று அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.












