தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் !
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கல்லூரியின் செயலர் அருட்சகோதரி பாத்திமா ராணி லூயிஸ் (Rev. Sr. Fatima Rani Louise) மற்றும் முதல்வர் முனைவர் அருட்சகோதரி ரூபா (Rev. Dr. Sr. M.S. Rubha) ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.மதுரவள்ளி (Dr. S.M.D. Mathuravalli) முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி டாக்டர் அருள்’ஸ் நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை மருத்துவ மையத்தின் (Dr. Arul’s Diabetes & Lifestyle Centre) சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி கண்ணன் (Dr. Aarathy Kannan, Consultant Physician & Diabetologist) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழா காலை 8:00 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர் டாக்டர் ஆர்த்தி கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் இணைந்து தேசிய கீதம் பாடினர்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தின் பெருமைகள், நாட்டின் வளர்ச்சிப் பயணம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். இளைய தலைமுறையினர் தேசப்பற்றுடன் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
செயலர் அருட்சகோதரி பாத்திமா ராணி லூயிஸ் சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, ஒழுக்கமும் அர்ப்பணிப்புமே ஒரு நல்ல தேசத்தை உருவாக்கும் என வாழ்த்துரை வழங்கினார்.

முதல்வர் முனைவர்.அருட்சகோதரி ரூபா மாணவிகள் கல்வியிலும் சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கி தேசத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
துணை முதல்வர் முனைவர். மதுரவள்ளி சுதந்திர தின வாழ்த்துச் செய்தியினைப் பகிர்ந்துகொண்டார்.
கல்லூரி மாணவிகளின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் கண்கவர் நடனம், தேசபக்திப் பாடல்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வின் நிறைவாக நன்றியுரை கூறப்பட்டு, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.












