தூத்துக்குடி J.C.I நடத்திய கலைப்போட்டிகளில் கீதாஜீவன் கல்லூரி சாதனை !
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் மற்றும் அறிவியல் கல்லூரியில் 12.08.2026 அன்று முதல்வர் முனைவர். இளங்குமரன் ஆலோசனைப்படி கல்லூரியில் இருந்து A.S.K.R. திருமண மண்டபத்தில் வைத்து J.C.I. பியர்ல்ஸ் சிட்டி நடத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான கலைப் போட்டிகளுக்கு கல்லூரியில் இருந்து 29 மாணவ,மாணவர்கள் பல்வேறு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அதில் சுவர் ஓவியம் (Wall Painting) போட்டியில் ஆறு மாணவர்களும், முக ஓவியப் போட்டியில் (Face Painting) இரண்டு மாணவர்களும், மூன்றாம் இடங்களையும், திடீர் நடனக்குழுப் போட்டியில் (Flash Mob) கலந்து கொண்ட எட்டு மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். அகஸ்டின் அற்புத லிஸி உதவிப்பேராசிரியர் வணிகவியல் துறை ரேவநந்தினி உதவிப்பேராசிரியர் ஆங்கிலம் மற்றும் பிற துறைப் பேராசிரியர்களும் மாணவர்களை பங்குபெற உறுதுணையாக இருந்தனர்.












