சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் கல்வியியல் கல்லூரியில் “வெற்றிகரமான வாழ்க்கைக்கான நடத்தை முறைகள்” சிறப்பு அமர்வு நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் கல்வியியல் கல்லூரியில் “Behavioural Patterns for Successful Living” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அமர்வு 30.04.2026 அன்று கல்லுரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒடிசாமாநிலம், அனந்த் நிகேதன் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் வினோஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கல்லூரியின் பேராசிரியர் Dr.பிரிஸ்ஸில்லா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர்.அம்சவேணி சிறப்பு விருந்தினரை கெளரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் மாணவர்களை ஆர்வமூட்டும் வகையில் உரையாற்றிய வினோஜி, சமூகத்தில் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, மாணவ- மாணவர்களிடம் நல்ல தகவல் தொடர்பு திறனை எவ்வாறு புத்திசாலித்தனமாக வழியில் வளர்ப்பது என்பதனை ppt மூலம் விளக்கினார். குழு விளையாட்டின் மூலம் மாணவர்களை ஊற்சாகப்படுத்தினார்.அதன் பின்னர் மாணவர்களுக்கு குழு நடவடிக்கைகள் (group activities) நடத்தப்பட்டன.

நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ள பல நற்சிந்தனைகள், புத்தக வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தலைமைத்துவ பண்புகளை ஆசிரிய-மாணவர்கள் வளர்க்கும் விதங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் உற்சாகமாக பங்கேற்று கேள்விக்கு பதிலளித்த ஆசிரிய-மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் மூலமாக மாணவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான நடத்தை முறைகள், தகவல் தொடர்பு திறன் மற்றும் கல்வி சார் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இறுதியாக பேராசிரியர் லிடியால் ராஜசெல்வி நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.













