தூத்துக்குடி என். எல். சி பவர் லிமிடெட், ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

தூத்துக்குடி என். எல். சி பவர் லிமிடெட், ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

என். எல். சி. தூத்துக்குடி, தமிழ்நாடு பவர் லிமிடெட், ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தூத்துக்குடி பாத்திமா நகர்ரில் உள்ள தூய பாத்திமா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு என். எல். சி., தமிழ்நாடு பவர் லிமிடெட் சி.இ.ஓ.,அனந்தராமானுஜம் தலைமை வகித்தார்.

ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி, சரவணன், கூடுதல் முதன்மை மேலாளர், மனித வளத்துறை, என். எல். சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ள எழுத்து உள்ளிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடி மற்றும் மருந்துகள் கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் என். எல். சி, தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் கண்புரை சிகிச்சை பெற வருபவர்களுக்கு என். எல். சி., தமிழ்நாடு பவர் லிமிடெட் சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இவை மட்டுமன்றி உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, தங்கும் வசதி, உணவு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

முகாமில் நாட்டு நலப் நலப்பணித்திட்டம் (அணி எண்கள் 47&57 ) மாணவிகள் 23 பேர், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஸ்டெல்லா பாக்கியம், முனைவர் புஷ்பகவல்லி, அரவிந்த் கண் மருத்துவமனை கந்தசாமி ஆகியோர் கலந்து ஏற்பாடு செய்திருந்தனர்.