தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 17 முதல் மே 31 வரை 45 நாட்கள் கோடை விடுமுறை ?

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 17 முதல் மே 31 வரை 45 நாட்கள் கோடை விடுமுறை ?

தமிழ்நாட்டில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது.

6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1 தொடங்கி 16 வரை முழு ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சில நாட்கள் முன்னதாக பள்ளிகளை தேர்தல் பணிக்காக ஒப்படைக்க வேண்டியது அவசியம். எனவே முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏப்ரல் 17ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 45 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் எனவும், ஜீன் 1 ம் தேதி திங்கட்கிழமை 2026 – 2027 ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஆரம்பமாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.