தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் !
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் குறுக்கு வட்டத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.08.2026 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கல்லூரிக் கலையரங்கத்தில் முதல்வர் முனைவர்.இளங்குமரன் தலைமையில் “குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் POSCO பணியிட பாலியல் தொல்லைத் தடுப்புச் சட்டம் POSH, இணையக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அபாயங்கள்: உங்கள் பாதுகாப்பை அறிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரான வழக்கறிஞர் ராகவி பி.ஜே (தாம்பரம் நீதிமன்றம், சென்னை) POSCO ACT பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 என்பதை பற்றியும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை மற்றும் ஆபாச படங்களில் இருந்து பாதுகாக்க ‘உருவாக்கப்பட்ட சட்டம் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.]

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டால் அவர்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள். 18 வயதுக்குட்பட்ட அனைத்து பாலின வேறுபாடின்றி இச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

தண்டனை பிரிவு 3,4,5, மற்றும் 6 ஆகிய பிரிவில் வன்கொடுமைக்கு கடுமையான சிறை தண்டனையும் வழங்குவார்கள். 9,மற்றும் 10 ஆகிய பிரிவுகள் ஆசிரியர் பெற்றோர் பாதுகாவலர் ஆகியவர்களின் மூலம் பாலியல் தொல்லைகள் இருந்தால் அதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.

இதே போன்று POSH சட்டம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தியச் சட்டம் ஆகும். இது பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 என்று அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி தெளிவாக மாணவ மாணவியர்களுக்கு எடுத்து கூறினார்கள்.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நிறுவனங்கள், தொழிற்;சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்று எடுத்து கூறினார்.

ஒரு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேல் இருந்தால் அங்கு “புகார் குழு” அமைக்க வேண்டும். நிறுவனங்களுக்கு உள்ளேயே புகார் அளிக்க ICC “அகப்புகார் குழு” ஒன்று செயல்பட வேண்டும் என்றும் அதே போன்று “உள்ளூர் புகார் குழு” LCC என்ற ஒன்று மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் இயங்குகிறது என்றும் கூறினார்.
பாலியல் சீண்டல்கலாக கூறுவது விரும்பதகாத உடல் ரீதியான தொடுதல் உடன்பாடுகளை கேட்டல், ஆபாசமாக பேசுதல், அல்லது சைகைகள் செய்தல் விரும்பதகாத நோக்கத்துடன் பார்ப்பது போன்றவை POSH சட்டத்தில் மூலம் தண்டனைக்குரிய குற்றங்களாக கூறினார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பாசமலர் சிறப்பு மதுரை கிளை சென்னை, இவர் தம் உரையில் கூறும் போது இணைய குற்றங்களும் போதைப் பொருள் அபாயங்களும் இன்றைய டிஜிட்டல் சமூகத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையம் மற்றும் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி செய்யும் சட்ட விரோத செயல்கள்தான் இணைய குற்றம் என்றும் கூறினார்.

நிதிமோசடிகள் வங்கி கணக்குகளை ஏமாற்றி பணம் திருடுதல் போலியான வேலைவாய்ப்பு, ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருடுதல் இணையத்தின் மூலமாக மிரட்டல் விடுத்து பணம் பறித்தல், சிறுவர்களை ஆன்லைனில் தவறாக வழி நடத்துதல் போன்ற இணைய வழி குற்றங்கள் என்று கூறினார்.

இதனால் மாணவ மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்முடைய தனிப்பட்ட கடவுச்சொல் (PASSWORD)ஐ யாரிடமும் பகிரக் கூடாது தெரியாத இணைப்பு (LINK) இணைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் போதை விற்பனை பற்றி புகார்களை உடனடியாக (National Cyber Crime Reporting Portal) என்ற அதிகாரபூர்வ தளத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

பாதுகாப்பு என்பது நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பது ஆகும். சுில வழிமுறையாக சாலையில் செல்லும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். அந்நியர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது. மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். இணையத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இறுதியாக மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்று கருத்தரங்கினை நிறைவு செய்தார்கள்.













