தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி !

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி !

மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் சுய கணக்கெடுப்பு ஜீலை17 முதல் 31ம் தேதி வரையிலும், வீட்டு பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் ஆக.1 முதல் ஆக.30 வரை நடக்க உள்ளது என பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, ‘வீடு பட்டியல் கணக்கெடுப்பு’க்கான சுய ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் se.census.gov.in என்கிற பிரத்யேக இணையதளம் வாயிலாகத் தங்கள் வீடு சார்ந்த 33 கேள்விகளுக்குப் பதிலளித்துச் சுயமாகவே ஆன்லைனில் விவரங்களைப் பதிவு செய்யலாம். அதில், கிடைக்கும் 11 இலக்க அடையாள எண்ணை, வரும் ஆக. 1 முதல் 30-ம் தேதி வரை களப்பணியாளர்களிடம் வழங்கினால் போதும்.

தொடர்ந்து, 2027 பிப். மாதம் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும்.

பேரணியில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளின் போது கேட்கப்படும் 33 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற சமூக நலத் திட்டங்களை வகுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியமாகும். இதற்குப் பொதுமக்களின் பங்களிப்பு தேவை என்பதால் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியை உதவி தலைமை ஆசிரியர் கோமா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணிய சுபாஷ் செய்திருந்தனர்.