தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் இலக்கிய பந்தி நிகழ்ச்சி 

தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் இலக்கிய பந்தி நிகழ்ச்சி 

தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் “இலக்கியப் பந்தி” இரண்டாம் நிகழ்வு அழகப்பா பல்கலைக்கழகம் கல்வி மையம் மாடியில் நடைபெற்றது.

அகநானூற்றுக் காதலில் உணர்ச்சித் தீவிரம் எனும் தலைப்பில் காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர். இராஜலட்சுமி, அகநானூற்றுக் காதலில் நம்பிக்கையின் வெளிப்பாடுகள் எனும் தலைப்பில் இலக்கிய ஆளுமை பெருங்குளம் மணிமொழிச் செல்வம் ஆகியோர் இலக்கிய பதார்த்தங்களை இலக்கியப் பசியாளர்களுக்கு பரிமாறினர்..

இந்நிகழ்வில் சங்கத்தமிழ் நூல்களில் எட்டுத்தொகையில் உள்ள அகநானூற்றுக் காதல் குறித்து பேசப்பட்டது. பங்கேற்றவர்களும் பரிமாறுபவர்களுடன் கலந்து கருத்துரையாடினர்.

தூத்துக்குடியை சேர்ந்த சிறந்த இலக்கிய ஆளுமைகள் வழக்கறிஞர் பாலசேகர், ஆசிரியர் ஆல்பர்ட், கருவூலத்துறை பணி நிறைவு பெற்ற செய்யது முகம்மது ஷெரிப், ஆசிரியர் வள்ளிநாயகி, ஆசிரியர் ராஜ்குமார், பணி நிறைவு ஆசிரியர் புலவர் முத்துசாமி, இலக்கிய ஆர்வலர் மாணிக்கவாசகம், லாரன்ஸ், பத்மநாதன். கண்ணன், லட்சுமி, பணி நிறைவு பெற்ற அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தலைவர் முனைவர். இராதாகிருஷ்ணன், குமிழ்முனை சைமன், கலையின் குரல் சக்திவேல், திரைப்பட இயக்குநர் அருந்ததி அரசு, ஒளிப்பதிவாளர் ரவி, ஸ்பிக் செல்வின் மற்றும் எழுத்தாளர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.

புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தினர் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.