கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 132 இணைந்து 08.07.2026 அன்று கல்லூரி வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை வகித்து தொடங்கி வைத்து, சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம், தலைக்கவசம் அணிதல், பாதுகாப்புப் பட்டை பயன்படுத்துதல், கைப்பேசி பயன்படுத்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. குறும்படத்தின் மூலம் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.













