ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை :
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் உள்ளிட்டோருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்பட்டது போல பொதுப்பிரிவினருக்கும் குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

பொதுப்பிரிவினரின் தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்ததால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்க 3 ஆசிரியர்கள் தொடர்ந்த மனுத்தாக்கலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.












