தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் நாட்டுப்புறக் கலையும்,கலைஞனும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் :

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் நாட்டுப்புறக் கலையும்,கலைஞனும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் :

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின், தமிழ்த்துறை, முத்தமிழ் இலக்கியப்பேரவை 9.4.2026 நேற்று நடத்திய “நாட்டுப்புறக் கலையும் கலைஞனும்”என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை கல்லூரியின் அப்ளாச்சாரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வு முதலாவதாக இறைவணக்கத்துடன் தொடங்கியது. நிகழ்வின் வரவேற்புரையை கல்வியியல் துறை இணைப் பேராசிரியர்  முனைவர். பிரேமலதா வழங்கினார்.
நோக்கவுரையை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் ,ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.பாபு வழங்கினார்.

நிகழ்வின் தலைமையுரையை கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் வழங்கினார்.

ஆய்வரங்கின் பேராளர்களாக ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர்.சுப்புலட்சுமி ,காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெயலட்சுமி ஆகியோர் வந்திருந்து  சிறப்பித்தனர்.

இரு அமர்வுகளாக நடைபெற்ற ஆய்வரங்கின்  முதல் அமர்வுத்தலைவரை கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.இராஜதுரை அறிமுகம் செய்தார்.
இரண்டாம் அமர்வுத் தலைவரை கல்லூரி உயிரறிவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். அல்லிமுத்து அறிமும் செய்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த்துறை முதலாமாண்டு மாணவர்கள் 26 பேர் ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.

முதல் அமர்வு மற்றும் இரண்டாம் அமர்வின் நிறைவில் முறையே பொருளறிவியல் துறை உதவிப் பேராசிரியர் கவிதா,உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரூபினா தனசுதா வழங்கினர்.

இந்த ஆய்வரங்கில் தமிழ்த்துறை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

நிழ்வின் இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்டு மாலை 4.00 மணியளவில் ஆய்வரங்கம் நிறைவடைந்தது.