கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா
தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ” சர்வதேச
மகளிர் தின விழா இறைவணக்கப் பாடலுடன் போஸ்கோ அரங்கத்தில் துவங்கியது.
இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ளோரை வரவேற்று துணை முதல்வரும்,கல்லூரி மகளிர் குழு ஒருங்கிணைப்பாளருமான தெய்வரத்தினா வரவேற்புரை நல்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கயத்தார் நிறுவனர் மற்றும் இயக்குனர் ராஜா IAS அகாடமியின் முத்துச்செல்வி கலந்து கொண்டு வாசிப்பதனை ஒவ்வொரு நாளும் மாணவிகள் தங்கள் கடமைகளாக பின்பற்றினால் தேர்வுகளில் வெற்றி அடையலாம் என்ற கருத்தினை சிறப்புரையாக வழங்கினார். அன்னாருக்கு நினைவுப் பரிசினை கணினி பயன்பாட்டு துறைத் தலைவர் முனைவர் சிவசங்கரி அளித்து சிறப்பு செய்தார்.
மேலும் மகுடம் சூட்டும் நிகழ்வாக, சிறப்பு விருந்தினராக, எப்போது வென்றான் காவல் துறை ஆய்வாளர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு “சமூகத்தில் பெண்மையாய் வெற்றி அடைய வேண்டும் என்றால் குறிக்கோளோடு பயணித்தால் நன்று ” என்பதனைச் சிறப்புரையாக நல்கினார்.

அன்னாருக்கு வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் கண்மணி நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
பெண்கள் அனைவரும் தைரியத்தோடு, அன்போடு, கல்வி ஆளுமையோடு திகழ்தல் நோக்கில் பெண்கள் முன்னெடுத்து செல்லுதல் வேண்டும் என்பதனைக் கல்லூரிச் செயலர் தந்தை அருட்முனைவர் ராஜதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட் முனைவர் ரொசரியோ அந்தோணி, கல்லுரி முதல்வர் முனைவர் பிரபு முன்னிலை வகித்தார்கள்.
கலை நிகழ்ச்சிகளான பாட்டு நடனம், நாடகம் நிகழ்த்தப்பட்டது.

அருள் தந்தையர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை மகளிர் குழு உறுப்பினர்களாகிய பேராசிரியர்களுடன் மாணவர் பேரவை உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர் கீர்த்தனா இந்நிகழ்விற்கான நன்றியுரையை வழங்கினார்.












