தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் மண் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரி, தாவரவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, தாவரவியல் மன்றம் சார்பாக உலக மண் தினத்தை முன்னிட்டு மண் ஆரோக்கியம், நிலைத்த நில மேலாண்மை, மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 12 டிசம்பர் 2025 இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், சேதமடைந்த நிலத்தை புனரமைக்கும் தாவர அடிப்படையிலான புதிய தீர்வுகளின் பங்கையும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர் டாக்டர். தங்கவேல், , பங்கேற்று, அதிக செரிவு கொண்ட தாவரங்கள் மற்றும் அவை மூலம் செய்யப்படும் தாவர வழி சுத்திகரிப்பு குறித்து ஆழமான விளக்கங்களைக் வழங்கினார்.
கனரக உலோகங்கள் கலந்த மண்ணை இத்தகைய தாவரங்கள் எவ்வாறு உட்கொண்டு, சேமித்து, நச்சுநீக்கம் செய்து, சூழலியல் புனரமைப்பில் பயனுள்ள கருவிகளாக செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

மாணவர்கள் மண் ஆரோக்கியம், நிலைத்த நில மேலாண்மை, மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றின் பரந்த முக்கியத்துவம் தொடர்பான வெளிப்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்களில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்களின் ஈடுபாடு, மண் சூழலியல் அமைப்புகளை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் வேண்டிய அவசரத் தேவையைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தியது.

இந்நிகழ்ச்சி மண் மீட்பில் சூழலுக்கு உகந்த வழிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மேலும், பாதுகாப்பு நோக்கமுடைய ஆய்வுகளிலும், செயல்பாடுகளிலும் ஈடுபட மாணவர்களை ஊக்குவித்தது.
பின்னர், நிலைத்த மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட எதிர்காலத்திற்காக மண் வளங்களைப் பாதுகாக்கும் ஒருமித்த உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.












